லீட்ஸ்:இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று (ஆக. 25) தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (ஆக. 26) நடைபெற்று வருகிறது.
8 ஓவர்களில், 5 மெய்டன்
நேற்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால், இந்திய அணி 78 ரன்களில் ஆல்- அவுட்டானது. குறிப்பாக, புது பந்தில் (New ball) ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ஓவர்களை வீசி வெறும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதில், ஐந்து ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்றைய முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு, ஆண்டர்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எனது வயதின் காரணமாக தற்போது எல்லாம் உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் செலவிடுகிறேன். மேலும், வலைப்பயிற்சியில் குறைவாகப் பந்துவீசி, போட்டியில் முழுமையான திறனை வெளிக்காட்டி வருகிறேன்.