நெல்லை:6ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
32 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி, நெல்லை ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.