தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் டெஸ்ட் போட்டி: 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி! - கிரிக்கெட் செய்திகள்

Ind vs SA Test Serious: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.

south africa vs india
south africa vs india

By ANI

Published : Dec 28, 2023, 10:40 PM IST

செஞ்சூரியன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (டிச.26) செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்களையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாட்டிய தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டீன் எல்கர் 28 ஃபோர்கள் உட்பட 185 ரன்களையும், மார்கோ ஜான்சன் 84 ரன்களையும், பெடிங்காம் 56 ரன்களையும் குவித்தனர். இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியைக் காட்டிலும் 163 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை ஆடியது.. தொடக்கம் முதலே தடுமாறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 34.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.

விராட் கோலியை தவிர்த்து மற்ற எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. விராட் கோலி 82 பந்துகளில் 12 ஃபோர்கள் மற்றும் 1 சிக்சர் உட்பட 76 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நந்த்ரே பர்கர் 4 விக்கெட்களையும், ககிசோ ரபாடா 2 மற்றும் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்திய அணி 131 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சூர்யா..! அலப்பறை கிளப்பிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details