தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெஸ்ட் தரவரிசை: நம்பர் 1இல் ஜொலிக்கும் ஸ்டீவ் ஸ்மித் - கேன் வில்லயம்சன்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Test rankings
டெஸ்ட் தரவரிசை

By

Published : Jun 17, 2021, 10:30 AM IST

Updated : Jun 17, 2021, 10:40 AM IST

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசை வெளியாகியுள்ளது. அதில், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

891 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடனும் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி, ஒருபடி மேல் சென்று 814 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கோலி மட்டுமல்லாமல் ரிஷப் பந்த், ரோகித் சர்மா ஆகிய இருவரும் தலா 747 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கின்றனர்.

பந்துவீச்சு தரவரிசை

பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அஸ்வின் 353 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங்

Last Updated : Jun 17, 2021, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details