சிட்னி: டி20 உலகக் கோப்பை நேற்றைய போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை உறுதி செய்தது.இந்த வெற்றி மூலம் இந்தியா பி பிரிவில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக அக்-16 ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களுடன் களமிறங்கி த்ரில் வெற்றி அடைந்து அணியின் முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் சிட்னி மைதானத்தில் நேற்று (அக்-27)இந்தியா மற்றும் நெதர்லாந்த் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
போட்டி தொடங்கியதில் இருந்து 9 ரன்கள் எடுத்த ராகுல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் மற்றும் சூர்யா குமார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட தொடக்கத்தில் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணியை விராட் 38 பந்துகளில் அரை சதம் அடித்து நிதான படுத்தினார்.இதனையடுத்து 20 ஓவர் முடிவில் இந்திய அணி 179 ரன்களை எடுத்தது.
இரண்டவாதாக பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்த் அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காராரான விக்ரம்ஜித் சிங் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஓடவுட், லீடு, அக்கர்மன், கூப்பர் மற்றும் பிரின்கிள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் நெதர்லாந்த் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்து படுதோல்வி அடைந்தது.