மெல்போர்ன்: டி20 உலக கோப்பை 2022 போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும்.