சிட்னி: 8ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றனர். அதன்படி சிட்னியில் இன்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் கள்மிறங்கிய வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேறினாலும், கிளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ரன்கள் விளாசி அணிக்கு பலம் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்கா 0 ரன், குசல் மெண்டிஸ் 4 ரன், டி சில்வா 0 ரன், அசாலங்கா 4 ரன் என ஒற்றை இலக்கில் ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.