சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஜூலை 19) தொடங்கியது.
இத்தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (சென்னை) அணியும், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (திருப்பூர்) அணியும் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் கௌசிக் காந்தி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
சென்னை சூப்பர் கில்லீஸ்: கௌசிக் காந்தி (கே), ஜெகதீசன், சுஜெய், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், ஹரீஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், தேவ் ராகுல், அருண், அலெக்சாண்டர்.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: தினேஷ், அரவிந்த், சித்தார்த், மான் பாஃனா, ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், துஷர் ரஹேஜா, ராஜ்குமார், முகமது (கே), அஸ்வின் கிறிஸ்ட், மோகன் பிரசாத், கவுதம் தாமரை கண்ணன்.
இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2021: மழையால் கைவிடப்பட்ட முதல் போட்டி; சுதர்சனின் அதிரடி வீண்