சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது.
இந்நிலையில், லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் ஒன்பதாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளனர்.
அதிரடி தொடக்கம்
இதன்படி, பேட்டிங் செய்துவரும் கோவை கிங்ஸ் அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்துள்ளனர். கோவை அணிக்கு ஒன் - டவுனில் களமிறங்கும் சாய் சுதர்சன் முதலிரண்டு போட்டிகளை போன்று இப்போட்டியிலும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கே), எஸ்.அருண், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், மணி பாரதி, ஆர் விவேக், லக்ஷமிநாராயணன் விக்னேஷ், சுரேஷ் லோகேஷ்வர், எம்.சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், எஸ். சுவாமிநாதன்.
லைகா கோவை கிங்ஸ்: கங்கா ஸ்ரீதர், சாய் சுதர்சன், அஸ்வின் வெங்கட்ராமன், சுரேஷ் குமார், ஷாருக்கான் (கே), அபிஷேக் தன்வர், செல்வ குமரன், முகிலேஷ், அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், இளங்கோவன் ஸ்ரீநிவாசன்.
இதையும் படிங்க: IND vs SL: இந்திய அணி முதலில் பேட்டிங்; வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு