சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. இத்தொடரில், நேற்று(ஜூலை.25) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
மாலை போட்டி
நேற்றைய முதல் போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவர்களில் 137 ரன்களையே சேர்த்தது. மதுரை அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் கௌசிக் 44 ரன்களை எடுத்தார்.
138 எனும் எளிய இலக்கை துரத்திய திருச்சி அணிக்கு ஆதித்யா கணேஷ் 41, முகமது அட்னான் கான் 53 ரன்களை சேர்க்க, திருச்சி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கை எட்டியது.
இதன்மூலம், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது திருச்சி. முகமது அட்னான் கான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரவு போட்டி
நேற்று(ஜூலை.25) நடந்த மற்றொரு போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களமாடிய கோவை கிங்ஸ், ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 201 ரன்களை குவித்து மிரட்டியது. கங்கா ஸ்ரீதர் ராஜ் 90, சுரேஷ் குமார் 58, சாய் சுதர்சன் 40 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.