சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) சென்னையில் தொடங்கியது. இந்நிலையில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்று (ஜூலை 23) மோதின.
சுருண்டது திண்டுக்கல்
இப்போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்பின்னர், களமிறங்கிய திண்டுக்கல் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களையே எடுத்தது.
திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக மணி பாரதி 26 (23), ஹரி நிஷாந்த் 19 (24) ரன்களை எடுத்தனர். மதுரை அணியில் ராமலிங்கம் பாரதி, ஜெகதீசன் கௌசிக் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், கிரண் ஆகாஷ், ரகுபதி சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.