தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TNPL 2021: டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் - டிஎன்பிஎல்

திருச்சி, திண்டுக்கல் அணிகள் மோதும் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ஹரி நிஷாந்த் திருச்சி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், DINDIGUL DRAGONS, RUBY TRICHY WARRIORS
TNPL 2021 MATCH 11 TRICHY vs DINDIGUL TOSS UPDATE

By

Published : Jul 27, 2021, 8:03 PM IST

சென்னை:தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதும் 11ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

திருச்சி பேட்டிங்

திண்டுக்கல் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், திருச்சி அணியில் ஆகாஷ் சும்ரா நீக்கப்பட்டு பொய்யாமொழி சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, திருச்சி அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

பிளேயிங் XI

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கேப்டன்), எஸ்.அருண், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், மணி பாரதி, ஆர் விவேக், லக்ஷமிநாராயணன் விக்னேஷ், சுரேஷ் லோகேஷ்வர், எம்.சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், எஸ். சுவாமிநாதன்.

ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ், அமித் சாத்விக், ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கேப்டன்), நீதிஷ் ராஜகோபால், பொய்யாமொழி, சுமந்த் ஜெயின், மதிவண்ணன், சுனில் சாம்.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் எதிராளியை கடிக்க பாய்ந்த குத்துச்சண்டை வீரர்

ABOUT THE AUTHOR

...view details