இலங்கையின் கிரிக்கெட் அணி வீரர் திசாரா பெரேரா (32). அந்த அணியில் அதிரடி ஆட்ட நாயகனாகவும், ஆல்ரவுண்டராகவும் விளங்கி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசாரா பெரேரா - இங்கை கிரிக்கெட் அணி வீரர் திசாரா பெரேரா
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Perera
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்துள்ளார். இவர் இதுவரை 6 டெஸ்டுகள், 166 ஒரு நாள் போட்டி, 84 டி20போட்டிகளில் ஆடியுள்ளார். 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றபோதும் அந்த அணியில், திசாரா பெரேரா இடம் பெற்றிருந்தார். இவர் ஆட்டநாயகனாக மட்டுமல்லாது டி20 அணியின் கேட்டபனாகவும் இருந்துள்ளார்.