தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எங்கள் ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைத்தேன்: ஸ்மிருதி மந்தனா - சூப்பர்நோவாஸ்

ஷார்ஜா: எங்கள் ஸ்பின்னர்களால் 118 ரன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இறுதிப்போட்டியில் வென்ற பின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

salma-khatuns-was-winning-spell-mandhana
salma-khatuns-was-winning-spell-mandhana

By

Published : Nov 10, 2020, 6:44 PM IST

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி வெற்றிபெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 118 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக சூப்பர்நோவாஸ் அணியை கட்டுப்படுத்தினர்.

இதைப்பற்றி ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில், '' இந்த ஆட்டத்தில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் 130 முதல் 140 ரன்கள் வரை எடுப்போம் என நினைத்திருந்தோம். ஆனால் முடியவில்லை. பிட்ச்சின் தன்மை பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. இதனால் எங்களால் கட்டுப்படுத்த முடியும் என நினைத்தோம்.

ஸ்மிருதி மந்தனா

எங்கள் ஸ்பின்னர்கள் அதனை செயல்படுத்திக் காட்டினார்கள். சல்மா கட்டூன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். நான் அவரிடம் நம்பிக்கை வைக்கக் கூறினேன். அவர் அதனை செயல்படுத்திவிட்டார். நாங்கள் வெற்றிபெற்றதற்கு அவரின் பந்துவீச்சு மிகமுக்கியமாக இருந்தது.

2-3 இடங்களில் ஃபீல்டிங்கில் பலரும் ஆச்சரியப்படுத்தினர். அதிலும் சந்தம் செய்தது மிரட்சியாக இருந்தது. ஏனென்றால் மகளிர் கிரிக்கெட்டில் நான் இதுவரை அப்படி யாரும் ஃபீல்டிங் செய்து பார்த்ததில்லை.

எனது ஆட்டத்தைப் பொறுத்தவரை, நான் டைமிங்கில் சரியாக இருந்தேன். கடந்த 7 மாதமாக நாங்கள் யாருமே சந்தித்துக் கொள்ளவில்லை. அதனால் அனைவரும் சந்தித்து நல்ல ஆட்டத்தை விளையாட வேண்டுமெ என்று நினைத்திருந்தேன். பிசிசிஐ-க்கு நன்றி கூற வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:கப்பு மேல ஆச இருந்த இத செய்யவே கூடாது' - பொல்லார்ட்

ABOUT THE AUTHOR

...view details