மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துவிட்டு இந்திய அணியினர் துபாயிலிருந்து நேற்று முன்தினம் (நவ. 14) இரவு மும்பை வந்தனர்.
இந்நிலையில், இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம்(Hardik Pandya) இருந்து முறையான ரசீது இல்லாத காரணத்தால் இரண்டு கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர்(mumbai Customs department) பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.