தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கேலிக்குள்ளான முகம்மது ஷமி.. கை கொடுக்கும் ராகுல் காந்தி..! - இந்தியா பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் முகம்மது ஷமி, இணையதளவாசிகளால் வறுத்தெடுக்கப்பட்டு கேலிக்குள்ளாக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் உங்கள் பக்கம் ஷமி” எனத் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Oct 26, 2021, 12:32 PM IST

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்வி இந்திய ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. இந்தக் கொந்தளிப்பை அவர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி மீது நெட்டிசன்கள் விமர்சன ரீதியிலான தாக்குதல்கள் தொடுத்தனர். தொடர்ந்து அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும் முகம்மது ஷமிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியும் முகம்மது ஷமிக்கு தார்மீக ஆதரவை வழங்கியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில், “முகம்மது ஷமி நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். இந்த மக்கள் வெறுப்பால் நிரப்பப்பட்டுள்ளனர், அவர்களை மறந்துவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டியில், 152 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி விளையாடியது.

இருவரும் அரைசதம் கடந்து பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை - இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று வெற்றி

ABOUT THE AUTHOR

...view details