கொழும்பு: இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிவருகிறது.
இந்நிலையில், இந்திய ஆல்ரவுண்டரும், ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இரண்டு போட்டி
இதையடுத்து, இன்று (ஜூலை 27) நடைபெற இருந்த இரண்டாவது டி20 போட்டி, நாளைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், திட்டமிட்டப்படி கடைசி டி20 போட்டியும், மூன்றாவது டி20 போட்டியும் நாளை மறுதினம் (ஜூலை 29) நடைபெறும் என கூறப்படுகிறது.
இதனிடையே, இலங்கையில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் இங்கிலாந்து செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துப்பாக்கிச் சுடுதல் ஏர் பிஸ்டல்: வெறுங்கையுடன் திரும்பியது இந்தியா!