கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்ஸ்மேன்கள் காலி
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தவான், ருத்துராஜ் ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில், சமீரா பந்துவீச்சில் கேப்டன் தவான் டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் படிக்கல் 9(15), சாம்சன் 0(3), கெய்க்வாட் 14(10), ராணா 6(15) என அணியில் இருக்கும் ஐந்து பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்டினர்.
ஆறுதல் அளித்த டவுன் ஆர்டர்
அதன்பின்னர், பொறுமையாக ஆடிவந்த துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் 16(32), ராகுல் சஹார் 5(5), வருண் சக்கரவர்த்தி 0(2) ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 23(28) ரன்களோடும், சக்காரியா 5(9) ரன்களோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணியில் ஹசரங்கா நான்கு விக்கெட்டுகளையும், கேப்டன் ஷனாகா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
தற்போது இலங்கை...
தற்போது, 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி 7 ஓவர்களில் 32/1 என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிவருகிறது.
இதையும் படிங்க: வெற்றி மங்கை மீராபாயை பாராட்டணுமா... போஸ்ட் ஆபிஸ் வாங்க - வேலூரில் புதுமுயற்சி!