கொழும்பு (இலங்கை): இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடரைச் சமநிலைப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜூலை 29) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
இலங்கை அணியில், இசுரு உடானாவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக பதும் நிசங்கா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய தரப்பில் நவ்தீப் சைனி நீக்கப்பட்டு அறிமுக வீரர் சந்தீப் வாரியர் இடம்பெற்றுள்ளார்.