கொழும்பு (இலங்கை): இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் இன்றோடு (ஜூலை 29) முடிவுக்கு வருகிறது. ஒருநாள் தொடரை இந்தியா 2-1 கணக்கில் வென்ற நிலையில், டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இலங்கையும் வென்றுள்ளன.
நீண்ட காலமாக வெற்றியையே கண்டிராத இலங்கை அணியை எளிதாக வீழ்த்திடலாம் என்று எண்ணியது டிராவிட் & கோ. இலங்கையும் அதற்கு ஏற்றாற்போல் விளையாடியது என்றாலும், இந்தியாவுக்கு பேரடியாக விழுந்தது, கரோனாதான்.
யார் கத்துக்குட்டி
இங்கிலாந்தில் கில், சுந்தர், ஆவேஷ் கான் அனைவரும் காயத்தில் கிளம்ப, இலங்கையில் இருக்கும் சூர்யகுமாரையும், பிருத்வியையும் அங்கு அழைத்துள்ளது விராட் & கோ. இந்த சூழலில், நேற்று முன்தினம் (ஜூலை 27) குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட அடுத்தடுத்து இந்திய அணியில் பலரும் சுய தனிமைப்படுத்துதலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், நேற்றைய போட்டியில் தவான், படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சாம்ஸன், ராணா என 5 பவுலர்களையும், 6 பவுலர்களையும் வைத்து இந்திய களமிறங்கியது. இதே கதைதான் இன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.