கொழும்பு:இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் தவானும், ருதுராஜ் கெய்க்வாடும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை இந்த இணை எடுத்தது. ருதுராஜ் 21 (18) ரன்களில் கேப்டன் ஷனாகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தவான் 40 (42), தேவ்தத் படிக்கல் 29 (23), சாம்சன் 7 (9) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.