கொழும்பு (இலங்கை): இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது இலங்கை அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, இந்திய வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டதை அடுத்து, நேற்றைய (ஜூலை 27) போட்டி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனாகா இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
7 மாற்றங்கள்
இந்தியா அணியில் தேவ்தத் படிக்கல், ரூதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகியோர் இன்றைய போட்டியில் அறிமுகம் ஆகின்றனர். பிருத்வி ஷா, சூர்யகுமார் இங்கிலாந்து செல்வதாலும், குர்னால் பாண்டியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் இன்றைய அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, தீபக் சஹார், யஷஸ்வேந்திர சஹால் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக நான்கு அறிமுக வீரர்கள் உள்பட குல்தீப் யாதவ், ராகுல் சஹார் ஆகியோரும் இன்றைய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி தரப்பில் சாரித் அசலங்கா, பண்டாரா ஆகியோர் நீக்கப்பட்டு சதீரா சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிளேயிங் XI
இலங்கை அணி: தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, சதீரா சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உடானா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா.
இந்திய அணி: ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), ரூதுராஜ் கெய்க்வாட், தேவதத் படிக்கல், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ராகுல் சஹார், குல்தீப் யாதவ், நவதீப் சைனி, சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி.
இதையும் படிங்க: சுத்தி அடித்த தீபிகா குமாரி: கால் இறுதியின் முந்தைய சுற்றுக்குத் தகுதி!