தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs SL: இந்திய அணி முதலில் பேட்டிங்; வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு - இந்திய அணி

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

இலங்கை அணி, இந்திய அணி
இலங்கை அணி, இந்திய அணி

By

Published : Jul 25, 2021, 8:07 PM IST

கொழும்பு (இலங்கை): இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல்ன் போட்டி இன்று (ஜூலை 25) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இருவர் அறிமுகம்

இந்திய அணிக்கு பிருத்வி ஷா, வருண் சக்கரவர்த்தி, இலங்கை அணியில் சாரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன ஆகியோர் இப்போட்டி மூலம் டி20 போட்டியில் அறிமுகமாகின்றனர்.

இலங்கை அணி:தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, சாரித் அசலங்கா, ஆஷென் பண்டாரா, வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உடானா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா

இந்திய அணி: ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), பிருத்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க: Tokyo Olympics: மேரி கோம் வெற்றி

ABOUT THE AUTHOR

...view details