தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஊரடங்கின்போது எனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொண்டேன்: தீப்தி ஷர்மா

ஊரடங்கின்போது எனது பேட்டிங்கை மேம்படுத்திக் கொண்டேன் என ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியின் வீராங்கனை தீப்தி ஷர்மா தெரிவித்துள்ளார்.

i-worked-on-my-game-after-lockdown-deepti-sharma
i-worked-on-my-game-after-lockdown-deepti-sharma

By

Published : Nov 8, 2020, 5:30 PM IST

நேற்று நடந்த சூப்பர்நோவாஸ் அணிக்கு எதிரான மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியின் தீப்தி ஷர்மா அதிரடியாக ஆடி 43 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில், ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி தோல்வியடைந்தது. ஆனால் அனைவரும் தீப்தி ஷர்மாவின் அனுபவமான ஆட்டத்தை பாராட்டினார்.

இதைப்பற்றி அவர் பேசுகையில், '' கரோனா ஊரடங்கின்போது நான் லாஃப்டட் ஷாட், இன்சைட் அவுட் ஷாட் ஆகியவற்றில் பயிற்சி மேற்கொண்டேன். அதனை இப்போது போட்டிகளில் அடிக்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய பிட்ச்களை ஒப்பிடும்போது, கொஞ்சம் மாற்றம் உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை பந்தை பார்த்து அடிக்க வேண்டும். அவ்வளவு தான்.

பவுலிங், ஃபீல்டிங் போது சின்ன சின்ன தவறுகள் நடந்தது. அதனை பயிற்சியின் போது நிச்சயம் மாற்றிக்கொள்வோம். வெற்றி, தோல்வி சாதாரணம் தான்.

146 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர். நாங்கள் கடைசி நிமிடத்தில் தான் போட்டியில் தோல்வியடைந்தோம். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. இறுதிப்போட்டியில் இன்னும் சிறப்பாக ஆடுவோம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஊரடங்கு காலத்தில் சில கிரிக்கெட் போட்டிகளில் ஆடினர். ஆனால் இந்திய வீராங்கனைகளுக்கு அப்படியில்லை. நீண்ட நாள்களுக்கு பின் களத்திற்கு திரும்பியது மகிழ்ச்சி. இறுதிப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:பார்முலா ஒன் கார் பந்தயம்: ரசிகர்கள் வெளியே, சுகாதார ஊழியர்கள் உள்ளே!

ABOUT THE AUTHOR

...view details