தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஓய்வை அறிவித்த ஆல்ரவுண்டர் பின்னி! - ஆல்ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி

ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி சார்பில் சிறந்த பந்து வீச்சுக்கு சொந்தக்காரரான ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்டூவர்ட் பின்னி
ஸ்டூவர்ட் பின்னி

By

Published : Aug 30, 2021, 4:35 PM IST

டெல்லி: இந்திய அணி ஆல்ரவுண்டரும், முன்னாள் வீரர் ரோஜர் பின்னியின் மகனுமான ஸ்டூவர்ட் பின்னர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

ஓய்வு அறிவிப்பு

37 வயதாகும் ஸ்டூவர்ட் பின்னி கர்நாடக அணியில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். இந்திய அணிக்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் 2010ஆம் சீசனில் இணைந்தார். அதைத் தொடர்ந்து 2011-2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2016-2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். இந்நிலையில் தான் ஓய்வு பெறுவது குறித்து பின்னி கூறியாதாவது:

நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடி இருப்பது பெருமையாக உள்ளது. இந்தத் தருணத்தில் எனது வளர்ச்சிக்கு உதவிய பிசிசிஐ, பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நான் விளையாடி அணியினர் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த பந்து வீச்சு சாதனை

இந்திய அணி சார்பில் ஒரு நாள் தொடரில் சிறந்த பந்து வீச்சுக்கான சாதனை ஸ்டூவர்ட் பின்னி வசமே உள்ளது. 2014ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே 12 ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது. இதனை 21 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னி முறியடித்தார்.

பின்னி கேரியரை காலி செய்த ஒரு ஓவர்

2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒரே ஓவரில் 32 ரன்களை வாரி வழங்கினார் பின்னி. இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாத்தில் தோல்வியுற்ற நிலையில், ஸ்டூவர்ட் பின்னியின் பந்து வீச்சு விமர்சனத்துக்கு உள்ளானது. பின்னர் சர்வதேசப் போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 78 ரன்கள் அடித்தார். இதுவே டெஸ்ட் தொடரில் இவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

இதையும் படிங்க: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கால்கள் செயலிழப்பு

ABOUT THE AUTHOR

...view details