தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ஓய்வு அறிவிப்பு

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு
பென் ஸ்டோக்ஸ் ஓய்வு

By

Published : Jul 18, 2022, 11:02 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாளை நடைபெறும் ஒரு நாள் போட்டியுடன் , சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.

அதில் ஓய்வு முடிவு கடினமான ஒன்று என்றாலும் , அணிக்கு தன்னால் 100% பங்களிப்பை தர முடியவில்லை என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தனது உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் , தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் எனவும் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

ஸ்டோக்ஸ் 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்ததுடன், 74 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். 2019இல் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்துக்கு வென்று தர பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் புதிய சாதனை

ABOUT THE AUTHOR

...view details