கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் டெஸ்ட் கேப்டன் காலமானார் - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுர இன்று(அக்.18) காலமானார்.
Captain Bandula Warnapura Dies
அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 68. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்த பந்துல வர்ணபுர, இலங்கை அணியின் பயிற்சியாளராகவும், நிர்வாகியாகவும் செயல்பட்டவர். அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு