தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்ரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி... சாம்சனின் அதிரடி வீண் - lucknow

லக்னோவில் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா - இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தென் ஆப்ரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
தென் ஆப்ரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

By

Published : Oct 6, 2022, 11:01 PM IST

லக்னோ: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா வென்ற நிலையில் முதல் ஒரு நாள் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது.

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் பங்குபெற ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. இதனால் ஷிகர் தவான் தலைமையில் இந்திய ’பி’ அணி இத்தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில் இன்றையபோட்டி மழை காரணமாக தாமதமானதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கினை தேர்வு செய்தது.

ஓபனிங் விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில் மலன் 22 ரன்களில் தாகூர் பந்தில் அவுட்டானார். டி காக் 48 ரன்கள் சேர்த்த நிலையில் பிஷ்னாய் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானார். பின்னர் கிளமிறங்கிய தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா, மார்க்ரம் அடுத்தடுத்து (8,0) விக்கெட்களை இழந்தனர்.

பின்னர் கிளமிறங்கிய கிளாசன், மில்லர் ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இறுதியாக தென் ஆப்ரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்தது. கிளாசன் 74 ரன்களுடனும், மில்லர் 75 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பின்னர் 250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் தவான் 4 ரன்களிலும், கில் 3 ரன்களுடனும் அவுட்டாகினர். பின்னர் கிளமிறங்கிய கெயிக்வாட் 19, இஷான் கிஷண் 20 என சொற்ப ரன்களில் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.

மிடில் ஆர்டரில் கிளமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், சாம்சன் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் நிகிடி பந்தில் அவுட்டானார். பின்னர் வந்த தாகூர் சிறிதுநேரம் அதிரடி காட்டி 31 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார். நிகிடியின் சிறப்பான பந்துவீச்சில் தாகூர், குல்திப், அவேஷ் கான் என அடுத்தடுத்து அவுட்டாக தென் ஆப்ரிக்காவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.

கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட சாம்சன் அதிரடியாக விளையாடியும் 6 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். முடிவில் தென் ஆப்ரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசிவரை போராடிய சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி - நீச்சலில் தங்கம் வென்ற கர்நாடக சிறுமி

ABOUT THE AUTHOR

...view details