தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

South Africa Vs Australia : மழையால் ஆட்டம் பாதிப்பு! தென் ஆப்பிரிக்கா திணறல்! - தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா

உலகை கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது அரைஇறுதி ஆட்டம் மழையால் தடைபட்டது.

icc
icc

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 3:55 PM IST

கொல்கத்தா :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அணியை தேர்வு செய்யும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ. 16) நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை கேப்டன் டெம்பா பவுமா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் டெம்பா பவுமா, மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 3 ரன்னில் ஆட்டமிழ்ந்தது. அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடக்க ஜோடி இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் எளிதில் கட்டுப்படுத்தினர்.

ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக திணறினர். எய்டன் மார்க்ரம் 10 ரன், அவரைத் தொடர்ந்து ராஸ்ஸி வேன் டர் துஸ்சென் 6 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 25 ரன்களுக்குள்ளேயே தென் ஆப்பிரிக்க அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பரிதவிப்புக்குள்ளானது .

14 ஓவர்களை கடந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. 14 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்து உள்ளது. ஹென்ரிச் கிளெசன் 10 ரன்னும், டேவிட் மில்லர் 10 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிங்க :Shubman Gill: சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் தவறவிட்டது ஏன்? சுப்மன் கில் பதில் என்ன?

ABOUT THE AUTHOR

...view details