கேப்டவுன்:மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.24) தொடங்கியது. இங்கிலாந்து அணி உடன் தென் ஆப்பிரிக்க அணி மோதி வருகிறது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் சுனே லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் களமிறங்கி உள்ளனர். 6.1 ஓவர்கள் முடிவில் 37 ரன்களை குவித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெரும் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி உடன் மோதும். இரு அணிகளின் வீராங்கனைகள் விவரம் பின்வருமாறு.
இங்கிலாந்து அணி: ஹீதர் நைட் (கேப்டன்) டேனியல் வியாட், சோபியா டன்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர்-ப்ரன்ட், ஆமி ஜோன்ஸ் (கீப்பர்), சோஃபி எக்லெஸ்டோன், கேத்ரின் ஸ்கிவர்-பிரண்ட், சார்லோட் டீன், சாரா க்ளென் மற்றும் லாரன் பெல்.