சூரத்: முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 18ஆம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் நேற்று (டிச.06) நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் இந்தியன் கேபிடல்ஸ் அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன.
இதில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியன் கேபிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியன் கேபிடல்ஸ் அணி குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்துக்கும் - கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், போட்டியின் முடிவுக்கு பிறகு ஸ்ரீசாந்த், இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் "எவ்வித காரணமும் இல்லாமல் சக வீரரான மற்றும் அனைவரிடமும் சண்டை போடக்கூடிய கவுதம் கம்பீருடன் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வீரு பாய் (வீரேந்தர் சேவாக்) உட்பட அவர் எந்த மூத்த வீரர்களையும் மதிக்கவில்லை.