தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஏலம் எடுப்பதில் அதிருப்தி; அணிக்கு டாட்டா சொன்ன சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் - இந்தியன் பிரீமியர் லீக்

சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அதிருப்தி காரணமாக சைமன் காட்டிச் விலகியுள்ளார்.

Simon Katich
Simon Katich

By

Published : Feb 18, 2022, 6:25 PM IST

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் சைமன் கேட்டிச் அணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது அணி நிர்வாகம் திட்டமிட்ட படி செயல்படவில்லை எனப் புகார் தெரிவித்து இம்முடிவை எடுத்துள்ளார்.

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டபோதே அணி நிர்வாகம் மீது சைமனுக்கு அதிருப்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு தொடருக்கான கேப்டன் பொறுப்பு நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் சைன் கேட்டிச் முன்னதாகக் கூறி திட்டமிட்டிருந்த வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுக்கத் தவறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை காரணம் காட்டியே ஐபிஎல் தொடர் தொடங்க ஆறு மாதம் உள்ள நிலையில், சைமன் கேட்டிச் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இதையும் படிங்க:ஆசியாவின் மிகப்பெரிய பழங்குடித் திருவிழா தெலங்கானாவில் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details