அகமதாபாத்: 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில், பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அர்ஜித் சிங், பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் மற்றும் தமிழ் மற்றும் பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் ஆகியோர் இசை நிகழ்ச்சியை நடத்துவர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று (அக் 12) அறிவித்துள்ளது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுவதைக் கருத்தில் கொண்டு, ரசிகர்கள் கூட்டம் பெரும் திரளென வருகை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிசிசிஐ தனது 'X' வலைதளப் பக்கத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இசை நிகழ்ச்சி அக்டோபர் 14ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். இதில் பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அர்ஜித் சிங், பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் மற்றும் தமிழ் மற்றும் பாலிவுட் இசைத் துறையில் பிரபலமான பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளது.