வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி-20 தொடரில் சஞ்சு சாம்ஸன் சேர்க்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி -20 போட்டிகளில் விளையாடுகிறது
தவான் தலைமையிலான ஒரு நாள் அணி தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் , இன்று முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்ஸன் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.