தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிளென் மேக்ஸ்வெல்லுக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து! - சச்சின் தெண்டுல்கர்

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு, இந்திய கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Etv Baharat
Etv Baharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 8:07 PM IST

மும்பை :ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒற்றை ஆளாக நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்ட அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு, ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூடி உள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணியை செங்குத்தாக தூக்கி நிறுத்திய பெருமை கிளென் மேக்ஸ்வெல்லை சேரும்.

அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணியில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை மேக்ஸ்வெல் பெற்றார். போட்டிக்கு முன்னதாக சிறிய விபத்தில் சிக்கி காயம் அடைந்த மேக்ஸ்வெல் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

நேற்றைய (நவ. 7) ஆட்டத்தில் மட்டும் கிளென் மேக்ஸ்வெல் 21 பவுண்டரி, 10 சிக்சர்களை விளாசினார். இந்நிலையில் அதிரடி மன்னம் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு இந்திய கிரிக்கெட் அனியின் ஜாம்பவான் சச்சின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் "வாழ்க்கைக்கும் கிரிக்கெட்டிற்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

சில நேரங்களில், ஒரு நீரூற்றைப் போல, உங்களை பின்னோக்கி இழுத்தும், மீண்டும் உங்களை முன்னோக்கியும் செலுத்துகிறது. நேற்றைய ஆட்டத்தின் போது, மேக்ஸ்வெல்லின் ஆட்டம், அவர் கிரீஸில் இருக்க வேண்டியிருந்த சூழல், ஆனால் அது அவருக்கு ஒரு நிலையான தலையுடன் இருக்கவும், பந்தை உன்னிப்பாகக் கவனிக்கவும் மற்றும் அவரது கை-கண் ஒருங்கிணைப்பு வேலையைச் செய்ய அனுமதித்தது.

விதிவிலக்கான பேட் வேகத்தால் அவரது அசூர ஆட்டம் ஆஸ்திரெலியாவுக்கு வெற்றியை தேடித் தந்தது. விளையாட்டின் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் விளையாட்டின் நிலைகளுக்கு வெவ்வேறு அடி வேலை தேவைப்படுகிறது" என்று பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க :இலங்கையை வெல்ல மாஸ்டர் பிளான்! நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சூசகம்!

ABOUT THE AUTHOR

...view details