தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சச்சினையும் விட்டு வைக்காத டீப் பேக் வீடியோ! - சச்சின் கொடுத்த விளக்கம் என்ன?

Sachin Tendulkar: இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்த டீப் பேக் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், தற்போதைய நவீன சமுதாயத்தில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

sachin tendulkar
sachin tendulkar

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:19 PM IST

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், ஆன்லைன் கேம் ஆப்பை விளம்பரப்படுத்துவது போன்ற சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் "பணம் சம்பாதிப்பது இவ்வளவு எளிது என்ற எனக்கு தெரியாமல் போய்விட்டது. எனது மகளே இந்த கேம் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்" என கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தனக்கும் அந்த வீடியோவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது முழுமையாக சித்தரிக்கப்பட்ட வீடியோவாகும் என தனது எக்ஸ் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அதில் அவர் கூறியதாவது, "அந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. இது போன்ற போலியான வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் குறித்து அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சமூக வளைதளங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். போலியான தகவல்கள் மற்றும் போலியான வீடியோக்கள் பரவுவதை தடுப்பதற்கு உரிய நடிவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவின் மூலம் சச்சின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மகாராஷ்டிரா சைபர் கிரைம் ஆகியோரையும் குறிப்பிட்டார். மேலும், முன்னதாக நடிகை ராஷ்மிக்கா மந்தனாவின் முகம் பொருத்தப்பட்ட போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதல் வீரராக உலக சாதனை படைத்த ரோகித் சர்மா.. அது என்ன சாதனை தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details