தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Ind Vs Aus : "2011 சச்சினுக்காக... 2023 டிராவிட்டுக்காக".. "உலக கோப்பை வெல்வது மகிழ்ச்சியான தருணம்" - ரோகித் சர்மா!

World Cup Cricket Final 2023 : உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வது மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார்.

Rohit
Rohit

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 9:46 PM IST

அகமதாபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி நாக் -அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (அக். 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 24 மணி நேரம் கூட இல்லாத இந்த இறுதிப் போட்டியை காண கோடிக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றன.

லீக் மற்றும் நாக் அவுட் என விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, நாளை (நவ. 19) ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதேபோல் லீக் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அதன்பின் சுதாரித்துக் கொண்டு வீறுநடை போட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வது மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு வென்ற உலக கோப்பையை லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கருக்கு அர்பணித்த நிலையில், நடப்பு சீசனில் உலக கோப்பையை வென்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டுக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டு உள்ளதாக ரோகித் சர்மா கூறினார்.

இந்திய அணியைகு பொறுத்தவரை அனைத்து விதமான வாய்ப்புகளும் உள்ள நிலையில், வெற்றிக்கான திட்டத்தை முன்கூட்டியே வெளியிட விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், விரும்பும் போது எந்த வீரர் வேண்டுமானாலும் விளையாடுவார்கள் என்றும் இந்திய வீரர்கள் தங்களுடைய வேலைகளை கடினமாக எடுத்துக் கொண்டு உள்ளனர் என்றும் ரோகித் குறிப்பிட்டார்.

முகமது ஷமி இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை அதிகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அனைத்து வீரர்களுமே தரமானவர்கள் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டார். இந்திய அணியில் விளையாட 15 வீரர்களும் தயாரான சூழலில் உள்ளதாகவும், அதேநேரம் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடக் கூடிய அணி என்றும், ஆஸ்திரேலியா என்ன செய்யும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் அணியாக செயல்படுவது என்பதே முக்கியம் என்றும் ரோகித் சர்மா கூறினார்.

இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவரிடமிருந்து வீரர்கள் தெளிவான முடிவுகளை பெற்று வருகின்றனர் என்றார். ராகுல் டிராவிட் எப்படி கிரிக்கெட் விளையாடியவர் என்று நன்றாக தெரியும் என்றும் ஆனால் வீரர்கள் அதற்கு மாறுபட்ட முறையிலான கிரிக்கெட்டை விளையாடும் நிலையில், ஒரு பயிற்சியாளராக அவர் விளையாட விரும்பும் கிரிக்கெட்டை நாங்கள் விளையாட எங்களை சுதந்திரமாக அனுமதித்து உள்ளார் என்று ரோகித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க :உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்..! வெற்றி வாய்ப்பு யாருக்கு..! முழு அலசல்!

ABOUT THE AUTHOR

...view details