ஹைதராபாத் : கர்நாடக மாநிலம் மைசூருவில் 1955 ஜூலை 19இல் பிறந்தவர் ரோஜர் மிக்கேல் ஹம்ரே பின்னி. ஆங்கிலோ இந்தியனான இவர் வலக்கை ஆட்டக்காரர் ஆவார். இந்திய அணியில் ஆரம்ப காலக்கட்டங்களில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தார்.
27 டெஸ்ட் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முறையே இவரது அதிகபட்சம் 83 மற்றும் 57 ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகம்
டெஸ்டில் 47 விக்கெட்டும் ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் தனது முதல் போட்டியை தனது சொந்த பூமியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கினார்.
அந்தப் போட்டியில் 46 ரன்கள் குவித்தார். சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தார். கபில்தேவ் தலைமையிலான 1983 உலக கோப்பை வெற்றி அணியிலும் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி, இந்தியா கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தார்.
சிறந்த ஆட்டம்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரோஜர் பின்னி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 2012இல் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 5 உறுப்பினர்களில் ஒருவராகவும் இடம் பிடித்துள்ளார்.