தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் கடும் போட்டியாளராக இருப்பார்" - ஆஷிஸ் நெஹ்ரா! - world cup 2024

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் கடும் போட்டியாளராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்து உள்ளார்.

Rinku singh
Rinku singh

By PTI

Published : Dec 3, 2023, 5:31 PM IST

ஹைதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டி20 தொடர் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகளில் 3ல் வெற்றின் பெற்று இந்திய அணி தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதுவரை முடிவடைந்த 4 போட்டிகளில் 3 போட்டிகளில் களம் இறங்கி உள்ளார் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங். இவரது பங்களப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது.

இந்நிலையில், ரிங்கு சிங் டி20 உலகக் கோப்பை அணியின் தேர்வுக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் கடும் போட்டியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் உலகக் கோப்பைக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. ரிங்கு சிங் களம் இறங்கும் இடத்தில் நிறைய வீரர்கள் உள்ளனர். ஜிதேஷ் ஷர்மா மற்றும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும், அணியில் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். ஆகையால் இவர்கள் எந்தெந்த இடங்களில் களம் இறங்கிறார்கள் என்பதை நாம் ஆலோசிக்க வேண்டும்.

ஆனால் ஒரு விஷயத்தை அழுத்தமாக கூற முடியும். ரிங்கு சிங் எதிரணியினருக்கு அழுத்தத்தை ஏற்படுத்த கூடியவர். நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடர்கள் உள்ளன. அதில் ரிங்கு சிங் எவ்வாறு செயல்படுகிறார் என்பது வைத்து அவரது இடம் உறுதியாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளின் நிலைமை வேறு மாதிரியானது. அனுபவ பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவெஸ் கான் மற்றும் முகேஷ் குமார் சர்வதேச போட்டியில் அறிமுகமாகினர். முதல் மூன்று போட்டிகளிலுமே 200 ரன்களுக்கு மேலே இலக்கு இருந்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களும் ரன்களை அதிகம் விட்டுக் கொடுத்தனர். இப்படியான சூழ்நிலையில் கூட முகேஷ் குமார் இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தார். அவர் யாக்கர்களை வீசிய விதம், டெத் ஓவர்களை கையாண்ட விதம் அனைத்துமே அபாரமாக இருந்தது" என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:மகளிர் பிரீமியர் லீக் 2024: ஏலத்தில் 165 வீராங்கனைகள் - பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details