சென்னை:ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனிக்குப் பதில், ரவீந்திர ஜடேஜா புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க தோனி முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சிஎஸ்கே அணியை வழிநடத்தும் மூன்றாவது கேப்டனாக இருப்பார். இந்த சீசனிலும் அதற்கு அப்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ICC Women's World Cup: வீழ்ந்தது வங்கதேசம்; தொடரில் நீடிக்கும் இந்தியா