தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கரோனா! - கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் பத்து பேருக்கு கரோனா

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் பத்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அஸ்வினின் மனைவி சமூக வலைதளங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

Ravichandran
Ravichandran

By

Published : May 1, 2021, 1:21 PM IST

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. அதில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அஸ்வின் குடும்பத்தில் பத்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், "எங்கள் குடும்பத்தில் ஆறு பெரியவர்கள், நான்கு சிறியவர்கள் என பத்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐந்து முதல் எட்டு நாள்கள் மிகவும் மோசமாக இருந்தது. கரோனா நோய் மிகவும் கொடியது. இந்த நேரத்தில் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் மிக முக்கியமானது.

கரோனாவை எதிர்த்துப் போராட அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள். இதுதான் சிறந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்தப் பதிவையடுத்து ரசிகர்கள் பலரும் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details