மும்பை - உத்தரகாண்ட் அணிகள் இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் , காலிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 647 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சுவேத் பர்கர் 252 ரன்கள் குவித்தார். முதல் இன்னிங்ஸை விளையாடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
533 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து விளையாடிய மும்பை அணி தனது 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து , 794 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. 2வது இன்னிங்ஸை ஆடிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு சுருண்டது. 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற அணி என்ற சாதனையை மும்பை படைத்துள்ளது.