இந்தியா-இலங்கை மோதும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவின் பிரேமதசா மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. போட்டியின் நடுவே மழை பெய்ததன் காரணமாக, இரு அணிகளுக்கு 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக, டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 227 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் தனஞ்செய, பிரவீன் ஜெயவிக்ரம 3 விக்கெட்டுகளும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.