தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐசிசி டி20 தரவரிசை: 4ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல் - டி20 தரவரிசை ராகுல் முன்னேற்றம்

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய வீரர் கே.எல். ராகுல் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Rahul moves a place up to 4th
Rahul moves a place up to 4th

By

Published : Feb 2, 2022, 8:06 PM IST

துபாய்: சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்டிங், பந்துவீச்சு, ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய வீரர் கே.எல். ராகுல் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே 10 மற்றும் 11ஆவது இடத்தை பிடித்துள்ளனர். பந்துவீச்சு தரவரிசை பிரிவில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 20ஆவது இடத்தை பிடித்துள்ளார். பும்ரா 26ஆவது இடத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் எந்த இந்திய வீரரும் இடம் பெறவில்லை.

கடந்தாண்டு 5ஆவது இடத்தில் இருந்த கே.எல்.ராகுல் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி, கடந்தாண்டு 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தாண்டு 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது நபி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குளிர்கால ஒலிம்பிக் 2022: இந்திய மேலாளருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details