கட்டக்: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாராபதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பயிற்சியின்போது காயம் காரணமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் தொடரிலிருந்து விலகினர். இதனால், கேப்டனாக ரிஷப் பந்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டார்.
முதல் போட்டியில் 211 ரன்கள் எடுத்தாலும், மோசமான பந்துவீச்சினால் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனவே, இன்றைய போட்டியில் அக்சர் படேலுக்கு அர்ஷ்தீப் சிங் அல்லது உம்ரான் மாலிக் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.