துபாய் : 17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று (டிச. 19) துபாயில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்கிய நிலையில், வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று தந்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு தொடக்கம் முதலே கடும் கிராக்கி நிலவியது.
அவரை விலைக்கு வாங்குவதில் ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. வலக்கை வேகப்பந்து வீச்சாளரான் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்க கூடிய வீரராக தெரியவில்ல.
அடிப்படை தொகையான 2 கோடி ரூபாயில் பேட் கம்மின்ஸ் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில், அவரை வாங்க ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் மாறி மாறி அவரது விலையை ஏற்றிய நிலையில் இறுதியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.