பாகிஸ்தான்-ஆஸ்திரேலியாஅணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மாலிக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரர் மசூத் 19 ரன்களில் வெளியேரினார்.
கடந்த போட்டியில் சதம் விளாசிய இளம் வீரர் சோஹைல் 34 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு இளம் வீரர் ரிஸ்வான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த வீரர்களில் உமர் அக்மல் 16 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மாலிக்-ரிஸ்வான் இணை பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
மாலிக் ஒருநாள் போட்டிகளில் 44ஆவது அரைசத்ததை பூர்த்திசெய்து 60 ரன்களில் வெளியேற, ரிஸ்வான் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சத்தைதை பதிவுசெய்து 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஒவர்களில் ஏழு விக்கெடுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது.
பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச்-கவாஜா இணை களமிறங்கியது. இந்த இணை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை எவ்வித சிரமமுமின்றி எளிதாக சமாளித்தது.