பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் காலீன் முன்ரோவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மீண்டும் முதலிடத்தில் பாபர் ஆசம்! - kholi
சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் ஆசம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
babar azam
இவர் 896 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து 830 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் காலீன் முன்ரோ இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
முதல் பத்து இடங்களுக்குள் இந்திய அணியிலிருந்து 678 புள்ளிகளைப் பெற்று ரோகித் சர்மா 9ஆவது இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 642 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தில் நீடிக்கிறார்.