தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகிஸ்தான் தொடரை வென்று ஆஸ்திரேலியா மிரட்டல் சாதனை! - ஸாம்பா

அபுதாபி : பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியா

By

Published : Mar 28, 2019, 9:38 AM IST

Updated : Mar 28, 2019, 10:46 AM IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா- கேப்டன் ஃபின்ச் களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கவாஜா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்ட, பின்னர் மார்ஷ் 14 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கோம்ப் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுப்புடன் ஆடிய ஃபின்ச், ஒருநாள் போட்டிகளில் 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் வந்த ஸ்டோனிஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 71 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகமாக கேப்டன் ஃபின்ச் 90 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், கம்மின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 46 ரன்களும், கேப்டன் மாலிக் 32 ரன்களும் எடுத்து வெளியேற, பின்னர் வந்த வீரர்களில் வாசிம் 43 ரன்கள் எடுத்து வெளியேற, 44.4 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகமாக ஸம்பா 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

கம்மின்ஸ் - மேக்ஸ்வெல்

இதனையடுத்து ஆஸ்திரேலியாவிடம் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.

Last Updated : Mar 28, 2019, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details