பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் யாஷிர் ஷா. 2014 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் குறைந்த சமயத்தில் சுமார் 235 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். யாஷிர் ஷா மீது 14 வயது சிறுமி, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "யாஷிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். மேலும் நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு என்னை மிரட்டி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து யாஷிர் ஷாவை தொடர்பு கொண்டு கூறினேன். ஆனால் அதற்கு அவர் என்னை ஏளனம் செய்து, நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார்.